
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அத்தோடு புரோமோஷன் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவும், தல அஜித் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும் இரண்டு வாரங்களுக்கு முன்ப் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியான இந்த பாடல் தான் படத்தில் அஜித்திற்கான இன்ட்ரோ சாங்க் எனக்கூறப்பட்டது.
இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு கூட பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா , “படம் தொடங்கும் காலக்கட்டத்திலேயே அஜித் சாருக்கு மாஸான இன்ட்ரோ பாடல் வேண்டும் என்று வினோத் கூறியிருந்தார். ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் விதத்தில் பாடல் வர வேண்டுமென்று விரும்பினேன். அப்படியே இந்தப் பாடலும் உருவானது” என தெரிவித்திருந்தார். பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில், தற்போது நாங்க வேற மாதிரி பாடல் யூ-டியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து #VeraMaari, #NaangaVeraMaari, #Valimai ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் தல ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.