
வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் நச்சென பதித்து விடுகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்தது. இதில் நாயகியாக நடித்ததன் மூலமாக பிரபலமான வாணிபோஜன் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் நடிகை வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உஷா சாய். இந்நிலையில் நடிகை உஷா சாய் கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தாஷமான செய்தி வெளியாகியுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் நடிகை உஷா சாய், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பொழிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.