தவறாக பேசி நடிகர் சித்தார்த்துக்கு மிரட்டல் விடுத்த பிரபல அரசியல் கட்சி!

By manimegalai aFirst Published Mar 21, 2019, 12:15 PM IST
Highlights

'சவ்கிதார்' என்ற வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்றே கூறலாம். 
 

'சவ்கிதார்' என்ற வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்றே கூறலாம். 

'சவ்கிதார்' என்றால் பாதுகாவலர் என்று பொருள். ட்விட்டரில் பிரதமர் தனது பெயருடன் சவகித்தார் வார்த்தையை இணைத்துள்ளார். அதைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவும் தனது பெயருடன் சவ்கிதார் என சேர்த்துள்ளார்.

இதுபோல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களுக்கு முன்னாள் சவ்கிதாரை இணைத்து ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். இதற்க்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களுக்கு கிளப்பி உள்ளன.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்து பதிவிடும் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் ஆவேசமான கூறிப்பதாவது...

'நான்  தேவைப்படும் போதெல்லாம் பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன்". ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள். தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கித்தார் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

பாரதிய ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்... என்று சித்தார்த் கூறியுள்ளார். 

click me!