
கோலிவுட்டில் முன்னனி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடன் நடக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இப்படி இருக்க ஒரு நடிகை அஜித்துடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.
இவருடன் நடிக்க மறுப்பது யார் என்றால்....? அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி தான்.
இவர் அஜித் - ஷாலினியின் திருமணத்திற்கு பின்னர் மேல் படிப்புக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டார். படிப்பு முடிந்த பின் அங்கேயே செட்டிலாகி விடலாமா அல்லது இந்தியாவுக்கு சென்று நடிக்கலாமா என யோசித்தவர்.
இந்தியாவிற்க்கு வந்து ஷாமிலிக்கு வீர சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஏற்கனவே விக்ரம் பிரபு தங்கை மற்றும் அவரது வீட்டில் பழகியிருந்ததாலும் நடிப்பதற்கு எளிதாக இருந்ததாலும். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.
மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, பதில் அளித்துள்ள ஷாமிலி, அஜித் எனது அண்ணன் மாதிரி என்றும்.
அவருடன் முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிப்பேன், கண்டிப்பாக ஜோடியாக நடிக்க மாட்டான் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.