
பைரவா படத்தில் விஜய்யின் இன்ட்ரோ சாங் டியூன் "வர்லாம்.. வர்லாம் வா. பைரவா" டீசர் வெளியான போதே ஹிட் ஆனது.
நேற்றய தினம் பைரவா படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியான நிலையில், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் இருந்து கலவையான விமர்சனங்கள் மற்றும் சிறு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு பிரபல விமர்சகர் "பைரவா ஓப்பனிங் சாங் மிகவும் மோசம் என்றும் அருண்ராஜ் காமராஜை தேர்வு செய்தது மிக மோசமான தேர்வு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதை பார்த்து பாடகர் அருண்ராஜா காமராஜுக்கு கடும் கோபம் வந்துவிட்டது போல.
உடனே அந்த விமர்சகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.
அப்போது அந்த விமர்சகருக்கு பதில் கொடுத்துள்ள, அருண் ராஜ் காமராஜ்.... நான் என் வழியில் போகிறேன் என்றும் யார் வந்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டான் என பதில் ட்விட் கொடுத்துள்ளார் .
இதற்கு பதில் கொடுத்த விமர்சகர் உங்களது பாடல் எனக்கு பிடிக்க வில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார் .
ஏற்கனவே இவர் எழுதி கபாலி படத்தில் பாடிய நெருப்புடா.... நெருங்குடா.... பாடல் உலக அளவில் பலரையும் ரசிக்க வைத்தது என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.