
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 400 கோடி செலவில் இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் படப்பிடிப்பு பெரும்மளவு முடித்து விட்டதாகவும், ஒரு பாடல் மட்டுமே படமாக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாடலை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோம்தி நதி, ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா, போன்ற பல பகுதிகளில் இந்த பாடல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கூறியுள்ள உத்தரபிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கவுரவ் திரிவேதி.
இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் மாநிலத்தில் வந்து நடிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றும்.
மேலும் தென்னிந்திய சினிமாக்களை கவர வேண்டும் என்று நினைக்கும் எங்கள் முதலமைச்சர் கொள்கைக்கு இது வலு சேர்ப்பதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அதே போல் படப்பிடிப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், படப்பிடிப்பிற்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து தருவோம் என கவுரவ் திரிவேதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.