தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பராக வலம் வரும் இர்பான், தான் விரைவில் தந்தை ஆக உள்ள தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள டாப் யூடியூப்பர்களில் இர்பானும் ஒருவர். இவர் விதவிதமான உணவுகளை சுவைத்து அதை வீடியோவாக பதிவிட்டு அதன்மூலம் மில்லியன் கணக்கில் பாலோவர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இவர் ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் மனைவி உடன் சேர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்த இர்பான், தன் மனைவியை வெளிநாடுகளுக்கும் அழைத்து சென்றிருந்தார்.
இவர்கள் இருவரும் தங்களது ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடினர். அதன்பின்னர் துபாய், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இருவரும் ஜோடியாக சென்று வந்தனர். சமீப காலமாக தன் மனைவி இன்றி சிங்கிளாகவே வீடியோக்களை வெளியிட்டு வந்தார் இர்பான். இதனால் உங்கள் மனைவிக்கு என்ன ஆச்சு என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு விடை அளிக்கும் விதமாக ஒரு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இர்பான்.
இதையும் படியுங்கள்... தந்தையுடன் என்ன பிரச்சனை... பிரிந்து சென்றதற்கு யூடியூப் தான் காரணமா? முதன்முறையாக மனம் திறந்த இர்பான்
அதன்படி இன்ஸ்டாவில் தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், அதில் கையில் ஒரு பலூன் ஒன்றை வைத்திருக்கிறார் இர்பான். அந்த பலூனில் Boy or Girl என எழுதி இருந்தது. அந்த பலூனை ஊசி வைத்து குத்தி உடைப்பதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். இதன்மூலம் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை சூசமாக அறிவித்துள்ளதாக கருதி ரசிகர்கள் அவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
யூடியூப்பர் இர்பான் தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்து உள்ளார். இவர் நடிப்பில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தான் வெளியிடுகிறது. இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மூலம் கோலிவுட்டிலும் நடிகராக காலடி எடுத்து வைத்திருக்கிறார் இர்பான்.
இதையும் படியுங்கள்... விஜய் உடனான சந்திப்பு... ஆஸ்கர் வாங்குன பீலிங் அது! லியோவில் கேமியோவா? சஸ்பென்ஸ் உடைத்த யூடியூபர் இர்பான்