
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபத்தில் இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து இயக்கிய "லூசிபர்" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தமிழில் 'பாரிஜாதம்', 'நினைத்தாலே இனிக்கும்', 'கனா கண்டேன்', 'வெள்ளித்திரை', 'மொழி', 'சத்தம் போடாதே', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள "டிரைவிங் லைசன்ஸ்" படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிருத்விராஜ், ரசிகர்களின் கேள்விகளுக்கு நச்சுன்னு பதிலளித்தார். அப்போது தல அஜித் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை அஜித்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று அதிரடி பதிலளித்துள்ளார்.
அப்படி என்ன பாடம் என்று அவரே கூறியது இதுதான், "சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் புது வீடு கிராகபிரவேசத்திற்கு பிருத்விராஜ் சென்றுள்ளார். அங்கு அஜித்தும் வந்திருந்தாராம். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த போது, அஜித் சொன்ன ஒரு விஷயம் பிருத்விராஜை வெகுவாக கவர்ந்துள்ளது. அதாவது படத்தின் வெற்றியை கண்டு ஆடுவதோ, தோல்வி அடைந்தால் துவளுவதோ தலயிடம் அறவே கிடையாதாம்".
தலயின் ஆச்சர்யமான இந்த குணத்தை கண்டு வியந்த பிருத்விராஜ் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருப்பது எப்படி என்பதை அஜித்திடம் தான் கற்றுக்கொண்டேன் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.