
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் பிரபல நடிகை தான் ஸ்ரீதேவி அசோக். கடந்த 1988ம் ஆண்டு பிறந்த இவர், 2004 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
சென்னையில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் தான் ஸ்ரீதேவி அசோக். கடந்த 2006ம் ஆண்டு வெளியான "கிழக்கு கடற்கரை சாலை" என்கின்ற திரைப்படத்தில் நடித்ததோடு தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி, பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "செல்லமடி நீ எனக்கு" என்கின்ற நாடகத்தின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடர்ந்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக சன், கலைஞர், ஜெமினி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் போன்ற பல முன்னணி சேனல்களில் 20க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர். தற்பொழுது ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி வரும் "மோதலும் காதலும்" என்கின்ற நாடகத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளார். அந்த பெண் குழந்தையை அழகான ஒரு கவிதையை ஆங்கிலத்தில் பாடி இந்த உலகத்திற்கு இப்பொது வரவேற்றுள்ளார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
"மாற்றுப்பாதையில் இந்த பூமிக்குள் நீ வந்ததால் எனக்கு தழும்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பரவாயில்லை அந்த தழும்புகள் நீ எனக்கு கொடுத்த பதக்கங்கள். உன்னை இந்த பூமிக்கு கொண்டு வர என் உயிரையே நான் பனையம் வைத்திருக்கிறேன். ஆனால் விரைவில் நான் அவற்றையெல்லாம் கடந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்" என்று கவிதை பாடி தனது மகளை இந்த பூமிக்கு அவர் வரவேற்றுள்ளார்.
எனக்கு நடந்த மோசமான சம்பவம்.. ஆனா யாருமே அதை கண்டுக்கல.. பிரபல சீரியல் நடிகை உருக்கம்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.