தன்னை அடையத் துடித்த தயாரிப்பாளருக்கு அன்புப் பரிசு கொடுத்த ஐஸ்வர்யா ராய்...!

First Published Oct 15, 2017, 4:41 PM IST
Highlights
famous producer give torcher for ishwarya rai


உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் பல முன்னணி நடிகர்களின் ஆசை. தற்போது ஐஸ்வர்யா ராயை  அடைந்தே ஆக வேண்டும் என்று துடித்த பிரபல இயக்குனர் பற்றி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜராக இருந்த சீமோன் ஷெப்பீல்டு மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது...  “நான் ஐஸ்வர்யா ராயின் மானேஜராக இருந்தேன். அப்போது வெயின் ஸ்டீன், ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை என்னிடம் அவர் தெரிவித்தார். தன்னுடன் ஐஸ்வர்யா ராயை தனியாக அனுப்பி வைக்கும்படி பல முறை என்னிடம் கூறினார். அவருடைய நோக்கம் எனக்குத் தெரிந்ததால் பல முறை அவர் சொல்லியும் நான் அதை ஏற்கவில்லை. நானும் ஐஸ்வர்யா ராயும் பெயின்ஸ் டீன் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற போது, அவர் என்னிடம் வந்து, “நான் ஐஸ்வர்யாவை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “அது நடக்காது” என்று நான் கூறினேன்.

பின் நானும் ஐஸ்வர்யா ராயும் ஓட்டலுக்குத் திரும்பியதும், ஒரு பொம்மை வாங்கி அதில் டயட் கோக்கை வைத்து அவருக்கு பரிசாக அனுப்பினோம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெயின் ஸ்டீன் பல நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!