பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

By manimegalai a  |  First Published May 15, 2020, 4:27 PM IST

பிரபல காமெடி நடிகர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது, ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 


பிரபல காமெடி நடிகர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது, ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 15 வருடங்களாக, கன்னட திரையுலகளில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மைக்கல் மது. இவர் பெங்களூருவில், தன்னுடைய மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். திரையுலகில் ஒரு ஒளிப்பதிவாளராக காலடி எடுத்து வைத்து, பின் நடிகராக மாறினார்.

Tap to resize

Latest Videos

undefined

இவரின் காமெடி நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எனவே முழு நேர நடிகராக உருவெடுத்தார். கன்னடத்தில் கிட்ட தட்ட 300 க்கும் அதிகமான படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக 'AK 47', 'சூரியவம்சா', 'ஷா', 'நீலாம்பரி' போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

  மேலும் செய்திகள்: மிளிரும் உடலில் ஜொலிக்கும் நகை மட்டும் அணிந்து... பாத்ரூமில் மிட் நைட் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய ரைசா!
 

51 வயதாகும் இவர், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினால் பெங்களுருவில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் இவருக்கு... மே 13 ஆம் தேதி அன்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கீழே சரிந்து விழுந்த இவரை, இவருடைய குடும்பத்தினர் உடனடியாக அருகில் இருந்த தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  மேலும் செய்திகள்:லாரியில் மோதி விபத்து... ஷங்கரின் உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே பலி !
 

இவரின், இழப்பு கன்னட திரையுலகினரையே கலங்க வைத்துள்ளது. அதே போல் ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மைக்கல் மது, பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கில் ஜாக்சனின் தீவிர ரசிகர் ஆவர். அதனால் அவருடைய பெயரை தன்னுனடய பெயரோடு சேர்த்து வைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

click me!