விஜய்யின் அடுத்த படத்தில் கமிட் ஆன பிரபல காமெடி நடிகர்!

 
Published : Dec 01, 2017, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
விஜய்யின் அடுத்த படத்தில் கமிட் ஆன பிரபல காமெடி நடிகர்!

சுருக்கம்

famous comedy actor commited vijay movie

இளைய தளபதி விஜய் தன்னுடைய 62ஆவது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஏற்கனவே இந்தப் படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தில் பிரபல காமெடி நடிகரும் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை .. நடிகர் யோகி பாபு தான்!  தன்னுடைய பேச்சால் மட்டும் இன்றி,  உடல் மொழியாலும் காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கும் இவர், இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எப்போதுமே முருகதாஸ் விஜயை வைத்து இயக்கும் படங்களில் விஜய்க்கு நண்பராக ஒரு காமெடி நடிகரை நடிக்க வைப்பார்... உதாரணம் துப்பாக்கி படத்தில் சத்தியன், கத்தி படத்தில் சதீஷ் . அதே பாணியில் தான் இந்தப் படத்தில் விஜயுடன் படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ந் தேதி தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!