எல்லோரும் சேர்ந்தா புடுங்கிடலாம்... 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர்!

 
Published : Dec 01, 2017, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
எல்லோரும் சேர்ந்தா புடுங்கிடலாம்... 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர்!

சுருக்கம்

thana serntha kootam teaser

நானும் ரௌடிதான் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி படத்திற்கு பின் ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார்.

அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள இந்தத் திரைப் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது.  டீசர் ஆரம்பத்திலேயே சூர்யா, 'தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்க’ எனக் கூறி கையை உயர்த்தியும்... தகுதி இருக்குறவன் எல்லாம் எங்க எப்படி ஆனானுங்கன்னு தெரியாம அப்படியே... என இழுக்கிறார்... வசனத்தை காணாம போய்டுறாங்க சார் என முடிக்கிறார்.

அடுத்து சூரியாவோடு மாஸ் என்ட்ரி இல்லா ... செம ஸ்மார்ட் என்ட்ரி... ஐயர் சூர்யா நெத்தில திருநூறு பூசுற மாதிரி... அதுல தம்பி போலீஸ்க்கு தான் ட்ரை பண்றீகலானு... அடுத்த ஷர்ட்ல சிங்கம் சூர்யா ஸ்டைல் பிட்டா மொரப்பா சூர்யா கண்ணாடிய போடுறாரு அதுவும் மூணு ஸ்டைல் ல.

கொழம்பிடாதீங்க 2 சூர்யாவானு..? ஒரே சூர்யாதான். போலீஸ் லா நெறைய பார்த்தாச்சுன்னு சொல்லிக்கிட்டு திரியுற ஜாலியான சூர்யா எப்படி சீரியஸ் போலீஸ் ஆபீசர் ஆகுறாரு என்றதுதான் கதையா இருக்குமோனு ஒரு கோணத்துல யோசிக்க வைக்குது.

இதுல சூர்யா பேசுற வசனங்கள் மாஸ். அதுலயும் ஒருத்தன் பணக்காரனா இருக்க, ஒரு  கோடி பேர பிச்சக்காரன் ஆக்குறான்... அதல்லாம் தோண்டி எடுத்தாலே நம்ப நாட்டுல இருக்குற பல பிரச்சனைகள வேரோட புடிங்கிடலாம் என்றது. அதுலயும் தனியா புடுங்க முடியாது... எல்லாரும் சேர்ந்தா புடுங்கிடலாம்னு சொல்லற வசனம். 

இந்த மாதிரி  வசனங்கள் கவனிக்க வைச்சாலும்... அனிருத் மியூசிக் சும்மா ஆட்டம் போட வச்சிருக்கு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!