
. ஆனால் இவர் நடிப்புக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் பலர் ஆசைப்பட்டனர். இதனால் மனம் மாறி திடீர் என மீண்டும் நடிக்க எண்ணினார். அதற்கு ஏற்றது போல் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற 'how old are you' படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடித்தார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்தப் படத்தின் டீசர் வெளியானது... அதிரடி நாயகியாக நடித்துள்ள ஜோதிகா இந்தப் படத்தின் டீசரில் நச்சுனு 'தே...' என்கிற ஒற்றை வார்த்தையை பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த வார்த்தையை ஒரு பெண்ணான ஜோதிகா பேசியதைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது இந்த வார்த்தை எழுப்பிய சர்ச்சையால், ஜோதிகாவின் குடும்பத்துக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது ஜோதிகா கடைத் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது இவரிடம் ஏன் இந்த வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜோதிகா அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். ஆனால், படம் வெளியானதும் அது ஏன் என உங்களுக்கே தெரிய வரும் எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.