
மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபல பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் பக்ருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூவாவுடன் டிஷ்யூம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பக்ரு. கேரளாவில் தன்னுடைய வீட்டில் வசித்து வந்த பக்ருவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பக்ரு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன், உடல் நலம் தேறி வருகிறேன்,. விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பி படங்களில் நடிப்பேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.