குஷ்புவோடு என்னை ஒப்பிடுவதா..? போகப் போக என் ஆட்டத்தை பார்ப்பீங்க.. காங்கிரஸில் சேர்ந்த ஷகிலா சரவெடி!

Published : Mar 27, 2021, 09:13 AM IST
குஷ்புவோடு என்னை ஒப்பிடுவதா..? போகப் போக என் ஆட்டத்தை பார்ப்பீங்க.. காங்கிரஸில் சேர்ந்த ஷகிலா சரவெடி!

சுருக்கம்

நான் அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கிறேன். பல விஷயங்களை கற்கத் தொடங்கியிருக்கிறேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீர்கள் என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலா தெரிவித்தார்.   

மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையை எனக்குத் தருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்.
பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் தற்போது அரசியலில் இறங்கியுள்ளேன். நடிகை என்பதை தாண்டி தனி அடையாளமும் தனி அதிகாரமும் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும்கூட ஒரு பவர் வேண்டும். ஆனால், உறுதியாகச் சொல்கிறேன், என்னுடைய தேவைக்காக அரசியலுக்கு வரவில்லை. காங்கிரஸிலிருந்து சென்ற குஷ்புவின் இடத்தை நிரப்ப நான் வரவில்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். நான் காங்கிரஸில் சேர்ந்தது போல, இவர் இங்கிருந்து விலகிச் சென்றதற்கு ஏதாவது காரணம் இருக்கும்.
கட்சித் தலைமை அனுமதித்தால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணமும் தொடரும். இப்பவே என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்.  நான் அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கிறேன். பல விஷயங்களை கற்கத் தொடங்கியிருக்கிறேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீர்கள்” என்று ஷகிலா தெரிவித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்