சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ள கல்யாணி, தான் ஏன் நடிகையாக தொடர முடியவில்லை என்பதற்கான பகீர் காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசனில் இருந்து இளம் நடிகர் ஜெயம் ரவி வரை ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஏராளம். பிரபு தேவாவுடன் அள்ளித் தந்த வானம், விஜயகாந்துடன் ரமணா, ஜெயம் ரவியுடன் ஜெயம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. திரைப்படங்களைத் தொடர்ந்து அண்ணாமலை, சாருலதா, கங்கா, ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க:
விஜய் டி.வி. யில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை உள்ளங்களை கொள்ளையடித்தார். சீரியல்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார். இந்நிலையில் 2013ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2018ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை நவ்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இதையும் படிங்க:
சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ள கல்யாணி, தான் ஏன் நடிகையாக தொடர முடியவில்லை என்பதற்கான பகீர் காரணம் குறித்து தெரிவித்துள்ளார். சினிமாவில் பல படங்களில் கதை என்ன என்னவென்றே தெரியாமல் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதேபோல் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த காலங்களில் அவரது அம்மாவிற்கு நிறைய போன் கால்கள் வருமாம், பெரிய தயாரிப்பாளர், முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் உங்கள் மகள் தான் ஹீரோயின் கொஞ்சம் அட்ஜஸ்ட் மட்டும் பண்ணிக்க சொல்லுங்க என்று கேட்பார்களாம். கல்யாணியின் அம்மாவிற்கு தமிழ் தெரியாது அதனால் முதலில் ஷூட்டிங் தேதிகளை தான் சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டவர்கள் பின்னாளில் உண்மை தெரியவந்ததாம். இதுபோன்று பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் இயக்குநரால் தான் சினிமாவை விட்டு ஒதுக்கியதாக அதிர்ச்சி காரணம் கூறியுள்ளார்.