ராகவா லாரன்ஸ் ஆசிரமத்தில் கொரோனா பரவ யார் காரணம் தெரியுமா?... வெளியானது பகீர் தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 27, 2020, 1:56 PM IST
Highlights

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேரும் லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா முகாமில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். அதோடு நின்றுவிடாமல், நலிந்த  சினிமா கலைஞர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிந்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு லட்சங்களை வாரி வழங்கினார். 

இதையும் படிங்க: 

அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து, தினமும் பலருக்கு உணவு வழங்கி வருகிறார். அப்படி தேடி தேடி உதவிகளை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸுக்கு இப்படி ஒரு சோதனையா? என அனைவரும் கலங்கும் அளவிற்கு வந்து சேர்ந்தது அந்த செய்தி. நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகரில் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: 

அந்த இல்லத்தில் தங்கியிருந்த 10 மாணவிகள், 5 மாணவர்கள், 5 பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ராகவா லாரன்ஸ் ட்ரஸ்ட் அமைந்துள்ள அதே தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட சோதனைகளின் மூலமாகவே ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: 

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேரும் லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா முகாமில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில்  மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் சமையல் பணிகளை மேற்கொண்டு வந்த 2 பெண்கள் மூலமாக அனைவருக்கும் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

click me!