இனி பொறுக்க முடியாது... 'இந்தியன் 2 ' படத்தில் இருந்து வெளியேறுகிறாரா முக்கிய பிரபலம்..?

By manimegalai aFirst Published Feb 9, 2021, 7:22 PM IST
Highlights

​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
 

​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 

அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 6 மாதத்திற்கு முடங்கியது. 

தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் இந்தியன் 2 படத்திற்கு 100 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்துவது சிரமம் என்பதால் ஷங்கர் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இருந்து வந்தார். மேலும்  அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த படத்தில் பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு 'இந்தியன் 2' படத்திலிருந்து இனி பொறுக்க முடியாது என எண்ணி, வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிஸியான ஒளிப்பதிவாளரான இவர் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தாமதமாவதால், வேறு படங்களில் ஒப்பந்தமாக இருந்ததாகவும், தற்போது முன்னணி நடிகர் படத்தின் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதால் இந்தியன் 2 படத்தில் இருந்த விலகலாம் என கூறப்படுகிறது.

இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை மற்றொரு முன்னணி நடிகர் பட வாய்ப்பு கிடைத்தாலும் இரண்டு படங்களும் கிளாஷ் ஆகாத அளவிற்கு ஒளிப்பதிவு செய்து தரும் திறமை கொண்டவர் ரத்னவேலு. 'இந்தியன் 2 ' படத்தில் முதலில் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் ஒப்பந்தமானார். படப்பிடிப்பில் தாமதம் ஆகிக்கொண்டே சென்றதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!