மத போதகராக மாறிய பிரபல நடிகை..! இது தான் காரணமாம்..!

Published : Aug 26, 2021, 06:23 PM IST
மத போதகராக மாறிய பிரபல நடிகை..! இது தான் காரணமாம்..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மோகினி தற்போது மதபோதகராக மாறி உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மோகினி தற்போது மதபோதகராக மாறி உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரை சேர்த்தவர் நடிகை மோகினி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கிலும் ஆதித்யா 369 என்ற படத்திலும், ஹிந்தியில் டான்சர் என்கிற படத்திலும் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். எனவே தமிழ் பட வாய்ப்புகள் மட்டும் இன்றி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடிக்க துவங்கினார்.

கொழுகொழு கன்னங்கள், பூனைக்கண், ஸ்டைலிஷான பேச்சு ரசிகர்களை கவர்ந்த தன்னுடைய அழகால் கவர்ந்த மோகினி, முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1999ஆம் ஆண்டு பாரத் கிருஷ்ணசுவாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.  திருமணத்திற்கு பின்பும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்த இவர் தமிழில் இவர் கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 'குற்றப்பத்திரிக்கை' படத்தில் நடித்து வந்த நிலையில், இந்த படம் வெளி வராமலேயே கைவிடப்பட்டது.

மேலும் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கலெக்டர் என்ற திரைப் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் தன்னுடைய கணவர், மற்றும் இரண்டு மகன்களை கவனித்து கொள்ள திரையுலகை விட்டே ஒதுங்கினார்.  தற்போது இவர் மதபோதகராக மாறியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகை மோகினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது... "தன்னுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சில நிகழ்வுகள் காரணமாக உடலளவிலும், மனதளவிலும், கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இதனால் தற்கொலை எண்ணமும் வந்தது. இதற்காக பல மருத்துவர்களை நாடிய போதும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் போதனைகள் தனக்கு ஆறுதலை கொடுத்தது.  அதில் எனக்கு நிம்மதி கிடைத்ததால் தொடர்ந்து அந்த பணியை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!