#Breaking நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்..! எந்த வழக்கில் தெரியுமா?

By manimegalai aFirst Published Aug 26, 2021, 4:00 PM IST
Highlights

நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீரா மிதுனை, எம்.கே.பி நகர் காவல் ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 

நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீரா மிதுனை, எம்.கே.பி நகர் காவல் ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சர்ச்சை நாயகியாக அறியப்பட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகமால் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த நிலையில், இவரை பொறி வைத்து பிடித்து சென்னை கொண்டு வந்தனர் தமிழக போலீசார். மேலும் மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவரையும் கடந்த 14 ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இருவரும் தாற்போது  புழல் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கும் நிலையில், ​ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர்.  அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட  சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்திருந்தார். 

மீரா மிதுன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் தொடர்ந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை ஓர் இரு தினங்களுக்கு எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். 

ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 செப்டம்பர் மாதம், வியாசர்பாடி எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், அடிப்படையில் நடிகை மீரா மிதுனை கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மீரா மிதுன் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரசித்த நீதிபதி, மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் இவரிடம் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய 2 நாள் காவலில் விசாரிக்க கூறிய நிலையில் அந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி. 

click me!