சாப்பாடு இல்ல... தூக்கமில்ல... என்னை காப்பாத்துங்க... சிக்கி சின்னாபின்னமாகி கதறும் பிரபல நடிகை..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 16, 2020, 05:52 PM IST
சாப்பாடு இல்ல... தூக்கமில்ல... என்னை காப்பாத்துங்க... சிக்கி   சின்னாபின்னமாகி கதறும் பிரபல நடிகை..!

சுருக்கம்

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் 400 மாணவர்களுடன் சிக்கியுள்ள செளந்தர்யா சர்மா அமெரிக்காவில் உள்ள தூதரகம் மூலம் உதவி கோரியுள்ளார். 

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிற்கு இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 28 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். 


இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் பிரபல நடிகையின் கண்ணீர் பதிவு Ranchi Diaries என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை செளந்தர்யா சர்மா அமெரிக்காவில் சிக்கியுள்ளார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் தேர்ச்சி பெற்ற செளந்தர்யா சர்மா, தனது நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினார். 



நியூயார்க் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடக்கவிருந்த நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அமெரிக்காவில் தீவிரமடைந்த கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கபட்டது. இதனால் செளந்தர்யா சர்மா அங்கேயே சிக்கி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 



தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் 400 மாணவர்களுடன் சிக்கியுள்ள செளந்தர்யா சர்மா அமெரிக்காவில் உள்ள தூதரகம் மூலம் உதவி கோரியுள்ளார். உணவு, தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும், இந்திய தூதரகத்திற்கும், வெளியுறவுத்துறைக்கும் கடிதம் எழுதியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்ணீர் மல்க கதறியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!