வெளியாகும் முன்பே மாஸ் காட்டும் 'மாஸ்டர்'..! 1மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்த வாத்தி கம்மிங்!

Published : Apr 16, 2020, 05:04 PM ISTUpdated : Apr 16, 2020, 05:08 PM IST
வெளியாகும் முன்பே மாஸ் காட்டும் 'மாஸ்டர்'..! 1மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்த வாத்தி கம்மிங்!

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த இந்த திரைப்படம், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என போடப்பட்ட, ஊரடங்கு உத்தரவின் காரணமாக, வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த இந்த திரைப்படம், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என போடப்பட்ட, ஊரடங்கு உத்தரவின் காரணமாக, வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல், மேலும் அதிகரித்து வருவதால்... மே 3 ஆம் தேதி வரை தற்போது ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 



எனவே ஏப்ரல் மாதம் 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், மே மாதம்,  தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டாவது, படம் ரிலீஸாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தன்னுடைய சாதனை பட்டியலை, வாத்தி கம்மிங் பாடல் மூலம் தொடங்கியுள்ளது. அதன்படி,  யூடியூபில் வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் லிரிக்கல் பாடல், இதுவரை 1 மில்லியன் லைக்குகளை குவித்து சாதனை செய்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் #VaathiComingHits1MLikes என்கிற ஹாஷ்டாக்கில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.



மிக குறுகிய காலத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்ற தளபதியின் 7 ஆவது வீடியோ பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் இந்த படத்தில், நடிகை மாளவிகா மோகன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், விஜய் டிவி தீணா, சாந்தனு , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.



  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!