வில்லன் நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்... சத்தமே இல்லாமல் செய்து முடித்த பலே காரியம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 16, 2020, 6:42 PM IST
Highlights

மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் சிலரை நியமித்து பள்ளிக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்படுமா? என கவனிக்க சொல்லியுள்ளாராம். 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் வில்லனாக நடித்தார். 

தெலுங்கு, தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்தாலும், உண்மையில் அனைவரும் ரியல் ஹீரோ என புகழும் அளவிற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் ஆன உதவிகளை பிறருக்கு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சுதீப்பும் சத்தமே இல்லாமல் அசத்தலான காரியம் ஒன்றை செய்து முடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

அதாவது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள 4 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சுதீப் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதையை டிஜிட்டல் உலகில் மாணவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கம்யூட்டர்களையும் வாங்கி கொடுத்துள்ளாராம். 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் சிலரை நியமித்து பள்ளிக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்படுமா? என கவனிக்க சொல்லியுள்ளாராம். பள்ளிக்கான உதவி மட்டுமின்றி ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை, மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் போன்ற வேலைகளையும் செய்து வருகிறாராம். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

click me!