ரூ.45 லட்சம் மோசடி விவகாரம்... கணக்காளர் ரம்யா குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்ட விஷால்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 16, 2020, 05:00 PM IST
ரூ.45 லட்சம் மோசடி விவகாரம்... கணக்காளர் ரம்யா குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்ட விஷால்...!

சுருக்கம்

இதன் அடிப்படியில் கணக்காளர் ரம்யா மீது, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் பிலிம் பேட்டரி என்கிற பெயரில் இயக்கும் இந்த நிறுவனம், சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரம்யா என்கிற பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் பேட்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகை, காணாமல் போவதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து, சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையை தன்னுடைய கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி  கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

இதை தொடர்ந்து விஷால் பிலிம் பேட்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயை பெற்று தர வேண்டும் என்றும்  கூறப்பட்டது.இந்நிலையில் இது குறித்து,விருகம்பாக்கம் போலீசார் விஷாலின் தாயரிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்தவர்களிடம் விசாரித்தனர். இதன் அடிப்படியில் கணக்காளர் ரம்யா மீது, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். 

 

இந்நிலையில் விஷால் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் “எங்கள் “விஷால் ஃபிலிம் பேக்டரி” நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா அவர்கள் நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான “விஷால் ஃபிலிம் பேக்டரியில்” பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.“விஷால் ஃபிலிம் பேக்டரி” கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!