பாலிவுட்டை உலுக்கும் கொரோனா... பிரபல நடிகரின் அம்மா, சகோதரருக்கு தொற்று உறுதி...!

Published : Jul 12, 2020, 04:57 PM IST
பாலிவுட்டை உலுக்கும் கொரோனா... பிரபல நடிகரின் அம்மா, சகோதரருக்கு தொற்று உறுதி...!

சுருக்கம்

இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதையடுத்து பலரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்   இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு முதலில் நடத்தப்பட்ட சோதனைகளில் தொற்று இல்லை எனக்கூறப்பட்டது. 

 

இதையும் படிங்க: அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி

ஆனால் இந்நிலையில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட antigen பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகளான ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதையடுத்து பலரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதனிடையே பாலிவுட்டில் பிரபல நடிகரான அனுபம் கேரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனுபம் கேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், எனது தாயாருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனது சகோதரர், உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!