’கமல்ஹாசன் சாரோடு நான்...’ புல்லரிக்கும் பூஜாகுமார்..!

Published : Nov 08, 2019, 04:21 PM IST
’கமல்ஹாசன் சாரோடு நான்...’ புல்லரிக்கும் பூஜாகுமார்..!

சுருக்கம்

கமல்ஹாசன் குடும்ப போட்டோவில் இடம்பிடித்ததால் அனைவரும் பூஜா குமார் மீதே கண் வைத்து வருகிறார்கள். இன்றும் கமல்ஹாசனின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வைரலாகி வருகிறார் பூஜா குமார். 

கமலுடன் பூஜா குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் கூகுள் தேடுதலில் ஒரே நாளில் பல லட்சம் பேர் தேடும் பிரபல நடிகையாகி விட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கமல் சார் கூட தொடர்ந்து 5 வருஷமா நடிக்கிறேன். அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டும் இல்லை, எல்லாவகையிலும் ஒரு உதாரண மனிதர். முக்கியமா, அவரோட தொழில் பக்தி மெய்சிலிர்க்க வைக்கும். ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு வீடு மாதிரி. கமலைப் போல ஒரு கடுமையான உழைப்பாளியை பார்க்கிறது கஷ்டம். பண்முகத் திறனாளி அவர். 

ஒரே சமயத்துல பல வேலைகளை செய்யறது கூட பெரிசு இல்லை. அதுல அத்தனையிலும் சிறப்பா அவர் செய்பவர். அரசியல், சினிமா, டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயமா என்ன? எனக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும்.

பொறுமையா இருக்கறதுக்கு எப்படின்னு எனக்குக் கத்துக் கொடுத்தவர் கமல் சார்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்து போராட்டக் குணத்தோட செயல்படுவார். சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். நான் கண்கூடா பல சமயம் அதைப் பார்த்திருக்கேன். புதுசா யோசிச்சு புதுப்புது ஐடியாக்களை உருவாக்குவார். சின்ன விஷயத்துக்குக் கூட மிகத் தீவிர மெனக்கெடல் அவர்கிட்ட இருக்கும். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார். ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியா படம் நேர்த்தியா வரணும் அது ஒண்ணுதான் அவரோட குறிக்கோளா இருக்கும்.

 

இப்ப அரசியல் ஈடுபாட்டிருந்தாலும் முழு மூச்சா அதுக்காக கடுமையா உழைக்கறார். கமல் சாருக்கு இறை நம்பிக்கை இல்லை. ஆனால், இறைவனோட பரிபூர்ண அருள் அவருக்கு இருக்கு. என்னைப் பொருத்தவரையில் கமல் ஒரு மேஜிக் மேன்’’என புல்லரிக்கிறார் பூஜா குமார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!