
ஆழ்வார்பேட்டையில் ஆண்டவர் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார் நடிகை பூஜாகுமார். நேற்று பரமக்குடி வீட்டில் குடும்ப போட்டோவில் இடபெற்று விட்ட பூஜா குமார் இன்றும் கமல்ஹாசனின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கினார்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதேபோல் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையும் ராஜ்கமல் நிறுவனத்தின் அலுவலகம் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டாலும் அட்ராக்ஷன் எல்லாம் பூஜா குமார் மீதே பதிந்திருந்தது. அப்போது ரஜினி அருகே கமல் நின்றிருக்க, அவருக்கு அடுத்து ஒருவர் அடுத்து பூஜாகுமாரி நின்றிருந்தார். அதாவது கமலுக்கும், பூஜா குமாரிக்கும் இடையே ஒருவர் இடைமுகுந்து நிற்க அப்போது அவரை கமல்ஹாசன் கடுப்பாக பார்க்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இடையில் புகுந்து நின்றவர் வேறு யாருமல்ல. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாராயணன் என்பது தெரிய வந்தது. முன்னதாக நேற்று பரமக்குடியில் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோருடன் பூஜா குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவைதளங்களில் பரவி வந்த நிலையில் இப்போது இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.