அப்பத்தாவ போட்டு தள்ள தயாரான குணசேகரன்! 40 சதவீத ஷேர் யாருக்கு? அந்தர் பல்டி அடித்த பட்டம்மாள்!

By manimegalai a  |  First Published Sep 6, 2023, 4:04 PM IST

'எதிர்நீச்சல்' சீரியல் ஒவ்வொரு நாளும், எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில்... தற்போது அப்பத்தாவை தீர்த்து கட்டினால் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும், என குணசேகரன் தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருப்பது தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
 


கோலங்கள் சீரியலை இயக்கி பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் தற்போது ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடும் பெண்களின் கதையை மையமாக வைத்து இயக்கி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல், டி ஆர் பி-யில் தொடர்ந்து முதலாவது இடம் அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

ஆதி குணசேகரனிடம் 40 சதவீத சொத்துக்களை ஆட்டையை போட்ட, ஜீவானந்தம் யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், சமீபத்தில் தான் ஜீவானந்தம் ஈஸ்வரியின் பழைய காதலர் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த உண்மையை ஈஸ்வரியின் அப்பா குணசேகரனிடம் ஓப்பனாக போட்டு உடைக்க, குணசேகரன் விவாகரத்து வரை சென்று விட்டார். ஒரு வழியாக அப்பத்தாவால் விவாகரத்து சம்பவம் டைவர்ட் ஆகி, தற்போது மீண்டும் சொத்து பிரச்சனையில் வந்து நிற்கிறது.

Tap to resize

Latest Videos

படுக்கைக்கு அழைத்த இயக்குனர்! KPY காயத்ரி கேட்ட செருப்படி கேள்வி! இரவு முழுவதும் தூங்க விடாம செய்த செயல்!

எப்போதும் குணசேகரனுடன் இருக்கும் ஆடிட்டர் மற்றும் வக்கீல் இருவருமே அடுத்து அப்பத்தாவின் மூவ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் தான், நாம் காய் நகர்த்த முடியும் என கூறிய நிலையில், இந்த பிரச்சனை முடிவுக்கு வரணும்னா அப்பத்தாவை தீர்த்து கட்டிடலாம் என குணசேகரன் முடிவுக்கு வந்துள்ளது, பார்பவர்களையே பதற வைத்துள்ளது.

Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?

இதைத் தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள புரோமோவில், அப்பத்தாவை நானே தீர்த்து கட்டுகிறேன் என கதிர் கொஞ்சம் துள்ள, அப்பத்தாவை போட்டு தள்ளனும் என தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருக்கிறார் குணசேகரன். மற்றொருபுறம் அப்பத்தாவுடன் அமர்ந்து ரேணுகா, ஈஸ்வரி, நந்தினி, தர்ஷினி, ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது,  தர்ஷினி இந்த சொத்துக்களை நீங்க  இவங்களுக்கு தான் கொடுக்க போறீங்க என நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனியை பார்த்து கூற... நான் இவங்களுக்கு தான் அந்த சொத்தை கொடுக்கப் போறேன்னு, உனக்கு சொன்னது யாரு என அப்பத்தா கேள்வி எழுப்ப? அனைவருடைய முகமே மாறிவிடுகிறது. இந்த புரோமோவால் அப்பத்தாவின் முடிவு என்னவாக இருக்கும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

click me!