Etharkkum Thunindhavan: சூர்யாவின் ''எதற்கும் துணிந்தவன்'' படம் வசூலில், கல்லா கட்டி வருகிறது. அந்த வகையில், ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் ''எதற்கும் துணிந்தவன்'' படம் வசூலில், கல்லா கட்டி வருகிறது. அந்த வகையில், ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பாண்டியராஜ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில்:
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
கதைக்களம்:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில், பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசான இப்படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூர்யாவுடன் நடித்துள்ள நட்சத்திரங்கள்:
சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அஜித்தின் வலிமைக்கு போட்டியா... சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்..?
கடந்த மாதம் 24ஆம் தேதி வெளிவந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம் அஜித்தின் வலிமை. இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடியை தாண்டியும் வசூல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஒரு வாரத்தின் வசூல் விவரம்:
வலிமை படத்தை தொடர்ந்து, கடந்த வாரம் சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஒரு வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு வசூல்:
அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழகத்தில் ஒரு நாளில் வசூல் செய்த தொகையை எதற்கும் துணிந்தவன் படம் ஒரு வாரத்தில் வசூல் செய்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், இதன் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.