இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்த சூர்யா படக்குழு ; இயக்குனர் வெளியிட்டுள்ள அப்டேட்

By Kanmani PFirst Published Nov 10, 2021, 8:03 PM IST
Highlights

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதன் இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் கடந்த 2-ம் தேதி வெளியானது. 1990களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட வழக்காய் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. 

இதில்  சூர்யாவுடன் , லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இதற்கான இசையை  ஷான் ரோல்டன் அமைத்திருந்தார்.  சிறந்த   படம் என்கிர பெயரை தட்டி சென்ற போதிலும் குறிப்பிட்ட சமூகத்தினரை விமர்சனம் செய்ததாகவும், இந்தியில் பேசியவரை அடிப்பது போன்ற காட்சியமைப்பாலும் ஜெய் பீம் படக்குழுவினர் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இருந்தும் விருதுகளை குவிக்கும் என நம்பப்படும் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் கமிட் ஆகியிருந்தார். இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

'எதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.   கடந்த செப்டம்பர் மாதம் காரைக்குடியில் முதல் கட்ட படப்பிடிப்பாக  51 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபலமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதனியக்குனர் பாண்டியராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட நிறைவடைந்து இந்த ஆண்டு துவக்கத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Shooting wrapped up successfully !

I sincerely thank my production house ,
our hero sir, sir and my team for all the support extended 🙏

More updates coming soon 🗡

— Pandiraj (@pandiraj_dir)

 

click me!