யூ-டியூப்பில் பொறி பறக்கவிட்ட ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்... நிகழ்த்திய வேற லெவல் சாதனை...!

By manimegalai a  |  First Published May 25, 2021, 7:38 PM IST

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 
 
'உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இந்த பாடல் வெளியாகி 2 மாதங்கலே ஆன நிலையில், யூ-டியூப்பில் 225 மில்லியன் வியூகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இந்த பாடலின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

click me!