அடி தூள்... 'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வேற லெவல் சாதனை..!

Published : Jun 11, 2021, 03:32 PM IST
அடி தூள்...  'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வேற லெவல் சாதனை..!

சுருக்கம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.   

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

மேலும் செய்திகள்: இது தச்சு போட்டதா... போட்டுட்டு தச்சதா?... உடலை ஒட்டியிருக்கும் பயங்கர டைட் உடையில் ரம்யா பாண்டியன்..!
 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இந்த பாடல் வேறு லெவல் சாதனை செய்துள்ளது. 

'உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிரபல நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
 

'காலா' படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: ஜொலிக்கும் உடை... பிளாக் ஹாட் பட்டர் ஃபிளை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
 

இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் கொண்டாடி தீர்த்தனர். மேலும் உலக அளவிலும் இந்த பாடல் ட்ரெண்ட் ஆகி பலரை முணுமுணுக்க வைத்தது. கல்லூரி மாணவர்கள், மற்றும் நடிகைகள் சிலரும் அவர்களது வெர்ஷனில் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி அதனை பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில்  இந்த பாடல் வெளியாகி 3 மாதத்திலேயே யூ-டியூப்பில் 25  கோடி பார்வையாளர்களால் பார்க்க பட்டு சாதனை படைத்துள்ளது. இதனை இந்த பாடலின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?