போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம்; அமீருக்கு அனுப்பிய ஜாஃபர் சாதிக் - இடியை இறக்கிய ED

Published : Feb 27, 2025, 04:48 PM IST
போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம்; அமீருக்கு அனுப்பிய ஜாஃபர் சாதிக் - இடியை இறக்கிய ED

சுருக்கம்

போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை ஜாஃபர் சாதிக், இயக்குனர் அமீரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 2000 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல நாட்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ஜாஃபர் சாதிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்தனர்.

போதை கடத்தல் மட்டுமின்றி சட்டவிரோத பணபறிமாற்றம் உள்பட பல பிரிவுகளில் அமலாக்கத்துறை, ஜாஃபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரணை நடத்தி வந்தது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில் இயக்குனர் அமீரின் பெயரும் இடம்பெற்றும் இருந்தது. இதனால் அமீரும் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்... ஜாபர் சாதிக் வழக்கு.. 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் - அமீர் லிஸ்டில் இருக்காரா?

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்ததாகவும், போதைப் பொருளை விற்பனை செய்து அதன்மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் ஜாஃபர் சாதிக் செலுத்தியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இயக்குனர் அமீர் மட்டுமின்றி பல்வேறு போலி நிறுவனங்களை நடத்தி, அதற்கான வங்கிக் கணக்குகளிலும் ஜாஃபர் சாதிக் பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கிக் கணக்கிலும் போதைப் பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை செலுத்தி இருக்கிறாராம் ஜாஃபர் சாதிக். அமலாக்கத்துறையின் பதில் மனுவை தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்பதற்காக இந்த வழக்கை மார்ச் 11ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளது. ஜாஃபர் சாதிக் வழக்கில் அமீர் பெயரும் அடிபடுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஜாபர் சாதிக் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பரிவர்த்தனை? இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டு ஆதங்கம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?