மறுபடியும் ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி... சரிங்க நம்ப வேண்டாங்க...

Published : Jul 09, 2019, 06:32 PM IST
மறுபடியும் ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி... சரிங்க நம்ப வேண்டாங்க...

சுருக்கம்

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஒருவழியாக மிக விரைவில், அதாவது வரும் ஜூலை 26 அன்று  தியேட்டர்களில் ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ட்விட் செய்துள்ளார். இப்படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இது போன்ற அறிவிப்புகளும் இதற்குமுன் பலமுறை வந்துள்ளன.  

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஒருவழியாக மிக விரைவில், அதாவது வரும் ஜூலை 26 அன்று  தியேட்டர்களில் ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ட்விட் செய்துள்ளார். இப்படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இது போன்ற அறிவிப்புகளும் இதற்குமுன் பலமுறை வந்துள்ளன.

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம்மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் ’என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் இயக்குநர் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாமதமானது. இப்படத்தை ஒரேயடியாக கிடப்பில் போட்ட கவுதம் அடுத்து விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தைத் துவங்கி அதையும் கிடப்பில் போட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்த வெப் சீரியலில் பிசியானார்.

இந்தப் பஞ்சாயத்துகளால் அப்படி ஒரு படம் இருப்பதை தனுஷும் அவரது ரசிகர்களும் மறந்துபோன நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில், ’எனை நோக்கி பாயும் தோட்டா’ முழுமையாக தயாராகிவிட்டது. ட்ரெயிலர் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்பட்டு படம் ஜூலை 26ம் தேதியன்று வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே காத்திருந்து காத்திருந்து மிகவும் டயர்டாகிவிட்டதால் தயாரிப்பாளரின் இச்செய்தியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் போலவே  ஷேர் கூட செய்யவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!