எடப்பாடியை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவித்த விஜய்….மெர்சல் மகிழ்ச்சி !!!

 
Published : Oct 18, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
எடப்பாடியை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவித்த விஜய்….மெர்சல் மகிழ்ச்சி !!!

சுருக்கம்

edappadi palanisamy and actor vijay meet again

மெர்சல் திரைப்படம் பிரச்சனையின்றி வெளிவர உதவி செய்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்.

மெர்சல் திரைப்படம் தீபாளியன்று வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் அறிவித்திருந்தனர்.

ஆனால் அந்தப்படத்துக்கு தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டன. முதலலி படத்தின் டைட்டில் தொடர்பாக எழுந்த பிரச்சனையை நீதிமன்றமே முடித்து வைத்தது. இதையடுத்து விலங்குகள் நல வாரியம் படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.

எடப்பாடியுடனானா சந்திப்புக்குப் பிற்கு , விலங்குகள் நலவாரியம் 'மெர்சல்' படத்திற்கு இரண்டு கட்'களுடன் சான்றிதழ் கொடுத்தது. எனவே 'மெர்சலுக்கு' ஏற்பட்டிருந்த அனைத்து தடைகளும் நீங்கியது.

இதையடுத்து இன்று காலை மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

முன்னதாக நேற்றிரவு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்த நடிகர் விஜய், மெர்சல் திரைப்படம் பிரச்சனை இன்றி வெளியாக உதவி செய்ததற்கு  தனது நன்றியை தெரிவித்து கொண்டார். 




 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!