Lucky Baskhar Release: நடிகர் துல்கர் சல்மானின் பான் இந்தியா படமான 'லக்கி பாஸ்கர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jul 09, 2024, 09:43 AM IST
Lucky Baskhar Release: நடிகர் துல்கர் சல்மானின் பான் இந்தியா படமான 'லக்கி பாஸ்கர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

தொடர்ந்து ரசிகர்களை கவரும் படியான, வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திரைப்படமான 'லக்கி பாஸ்கர்'- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி மிக பிரமாண்டமாக எழுதி இயக்குகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், படத்திற்காக தயாரிப்பாளர்கள் எண்பதுகளின் மும்பையை  (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! அவரே வெளியிட்ட புகைப்படங்கள் - குவியும் வாழ்த்து!

பெரிய அளவில் தரமான உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கும் பிரமாண்டமான செட்களை உருவாக்கத் தயங்கவில்லை. 'லக்கி பாஸ்க'ரின் வாழ்க்கை காலக்கட்டத்திற்கு பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் செட்டுகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வர விரிவாக ஆராய்ச்சி செய்து தனது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தினால் சிறந்த கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, லக்கி பாஸ்கரின் பயணத்தை வசீகரிக்கும் பாணியில் படம்பிடித்துள்ளார். 

மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர், பாடல்கள் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜிம் பாடி கணவரை சமாளிக்க.. நண்பர்களிடம் குங்ஃபூ கற்கும் வரலட்சுமி சரத்குமார்! அந்த கூத்தை நீங்களே பாருங்கள்!

இப்படத்தை முறையே சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகின்றனர். பான்-இந்தியா திரைப்படமான 'லக்கி பாஸ்கர்' தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?