- Home
- Gallery
- ஜிம் பாடி கணவரை சமாளிக்க.. நண்பர்களிடம் குங்ஃபூ கற்கும் வரலட்சுமி சரத்குமார்! அந்த கூத்தை நீங்களே பாருங்கள்!
ஜிம் பாடி கணவரை சமாளிக்க.. நண்பர்களிடம் குங்ஃபூ கற்கும் வரலட்சுமி சரத்குமார்! அந்த கூத்தை நீங்களே பாருங்கள்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமணம் ஆன தன்னுடைய நண்பர்களிடம் குங்ஃபூ பயிற்சி எடுத்துக்கும் ஹாப்பி மொமெண்ட்ஸ் குறித்து பகிர்ந்துள்ள வீடியோ மற்றும் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு ஜூலை 3 -ஆம் தேதி, தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த எந்த ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை. பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சில சினிமா விமர்சர்களும், திருமணத்தை ரிஜிஸ்டர் செய்வதில் குழப்பம் ஏற்படும் என்பதால், திருமணம் சென்னை தாஜ் ஹோட்டலில் தான் நடந்தது என்று கூறினர்.
ஆனால், திருமணம் ஏற்கனவே வரலட்சுமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது போல், தாய்லாந்தில் தான் நடந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தாய்லாந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் திருமணமான தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் வரலட்சுமி குங்ஃபூ செய்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் கிண்டலாக உங்கள் கணவரை சமாளிக்க தற்காப்பு கலை பயிற்சியா என கிண்டலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
அதே போல் வரலட்சுமி சரத்குமாரிடம், உங்களின் திருமண புகைப்படங்களை வெளியிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதால், கூடிய விரைவில் ரசிகர்களின் ஆசையை வரு நிறைவேற்றுவார் என தெரிகிறது. வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நிக்கோலாய் குடும்ப வழக்கப்படியும், பாரம்பரிய படியும் நடந்ததாக கூறப்படுகிறது.