
கவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி–பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்... அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான்அதைச் செய்யவே இல்ல,” என்றார்.
ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" பாட்டுத்தான்.
கண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்… தகரத்தோடு இல்லையே... நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.