Sivakarthikeyan | ஓடிடியிலும் சாதனை படைத்த டாக்டர் ; உலகளவில் ட்ரெண்டான சிவகார்த்தியேகன்!!

By Kanmani PFirst Published Nov 20, 2021, 12:18 PM IST
Highlights

உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக சிவகார்த்தியேகனின் டாக்டர் இடம் பிடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த எஸ்.கே...  நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, டான், வாழ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில்  பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்பே பாடல்கள் மூலம் மிக பிரபலமான டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம்( அக்டோபர்) 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் தரமான வரவேற்புகளை பெற்று வருகிறது. நகைச்சுவை கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள டாக்டர் 25 நாட்களை கடந்துள்ளது. 

இந்நிலையில் டாக்டர் திரைப்படம்  இதுவரை பெற்றுள்ள தியேட்டர் வசூல் குறித்த விவரத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று வாரங்களில் 100 கோடி தியேட்டர் வசூலை டாக்டர் படம் தாண்டியுள்ளதாகவும், இந்த மாபெரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த  ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு  நன்றி என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்திருந்த ரெமோ படம் தமிழக திரையரங்குகளில் 50 கோடிகளைத் தாண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக  டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை குவித்த சிவகார்த்திகேயனின்  முதல் படம் என்ற பெருமையைப் பெற்றும் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸ் மற்றும் சன் என்எக்ஸ்டி ஆகியவற்றிலும் வெளியிடப்பட்டுள்ளது.நகைசுவை ஆக்ஷனாக வெளியான இந்த படம் குறித்து சமீபத்தில் மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ள  சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டது,அதாவது  உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நம்பர் ஒன் ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் டாக்டர் வெளியான நிலையில் தற்போது ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளது என தெறிக்கப்பட்டுள்ளது.

 

After a much-celebrated TV premiere, our fun-filled is heading towards its 50th day in theatres and stays in the Top 10 most-watched movies globally 🤩🔥

No words to express our gratitude for your love and response ♥️ pic.twitter.com/6EjqHZ80Vk

— KJR Studios (@kjr_studios)

 

click me!