தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் எது? MGR தான் அதில் ஹீரோ - ஆனா வேற்று கிரகவாசியாக நடித்தது யார் தெரியுமா?

உலக அளவில் பல மொழிகளில் ஏலியன் சம்மந்தமான படங்கள் பல ஆண்டுகாலகமாக எடுக்கப்பட்டு வருகின்றது. சில கதைகள் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியை பொறுத்தவரை பெரிய அளவில் ஏலியன்கள் சம்மந்தமான படங்கள் எடுக்கப்படவில்லை என்று தான் கூறவேண்டும்.


கடந்த 2019ம் ஆண்டு வெளியான தியாகராஜன் குமாரராஜா படத்தில் பிரபல நடிகை மிர்னாலினி ரவி ஒரு ஏலியனாக நடித்திருப்பார். இந்நிலையில் அதற்கு முன்பு ஏலியன் குறித்த படங்கள் தமிழில் எடுக்கப்பட்டுள்ளதா என்றால் சந்தேகமே. டெக்னாலஜி உச்சத்தை தொட்டுவிட்ட காலத்தில் கூட பல இயக்குனர்கள் அந்த சப்ஜெக்ட்டை தொட தயங்குகிறார்கள் என்று தான் கூறவேண்டும். 

ஆனால் 1963ம் ஆண்டு, அதாவது சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் இயக்குனர், அப்போதைய முன்னணி நடிகரான எம்ஜிஆர் அவர்களை வைத்து ஒரு ஏலியன் திரைப்படத்தை எடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா. ஆம் அது உண்மைதான், வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதர்களை கடத்தி செல்வது தான் அந்த படத்தின் கதை. 

Latest Videos

சூடுபிடிக்கும் தளபதி 68 பிசினஸ்.. படத்துக்கு பெயரே வைக்கல அதற்குள் ஓடிடி உரிமை விற்பனை! அதுவும் இத்தனை கோடியா?

அந்த படத்தின் பெயர் கலை அரசி, youtube தலத்தில் இன்றும் இந்த திரைப்படம் உங்கள் பார்வைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் ஹீரோ என்றால், அதில் வில்லன் நிச்சயம் நம்பியராகத்தான் இருக்கமுடியும். ஆம் இந்த படத்தில் வேற்றுகிரகவாசியாக வந்து அசத்தியது நம்பியார் தான். வேற்றுகிரகம் என்பதை தாண்டி, பல யூனிவெர்சுகளுக்கு மனிதன் பயணம் செய்வது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றிருக்கும். 

ஞானமூர்த்தி கதையில், காசிலிங்கம் என்பவருடைய இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. உண்மையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சிகள் இல்லாத காலத்தில், வேற்றுகிரகம், பறக்கும் தட்டு மற்றும் யூனிவெர்ஸ் விட்டு யூனிவெர்ஸ் பயணம் என்ற கதை அமைப்பு உண்மையில் நம்மை பிரமிக்க வைக்கிறது என்று தான் கூறவேண்டும்.

மறுபடியும் முதல்ல இருந்தா..! மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கிய அஜித் - இப்போ எந்த நாட்டுல தெரியுமா?

click me!