நடிகர் அஜித் குறித்து, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன கருத்து தற்போது வைரலாகி வருகிறது..
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுக உள்ளார். லைகா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதில் இருந்தே ஜேசன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பொதுவாக ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாரிசு திரைத்துறையில் கால்பதிக்க விரும்பினால் அவரும் நடிகராகவே விரும்புவார். ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குனராக திரையில் அறிமுகமாக உள்ளார். ஜேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. எனினும் ஜேசன் இயக்கும் படத்தின் அறிவிப்புகளை லைகா நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜேசன், தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம், ரசிகர்களுடன் உரையாடி, தன்னைப் பற்றியும் தனக்குப் பிடித்தவர்கள் பற்றியும் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அஜித் குமார் அல்லது தல பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, அஜித் என்றால் 'கெத்து’ (Man of Gethu) என்று பதிலளித்த ஜேசன், தான் ஒரு அஜித் ரசிகர் என்பதைத் தவிர அதையும் வெளிப்படுத்தினார். தனது தந்தையை தவிர தனக்கு மேலும் பிடித்த நடிகர்கள் 2 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஆன்லைனில் லீக்கான ஜெயிலர் HD பிரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழுவினர்.. பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்குமா?
தனது தந்தையை தவிர, நடிகர்கள் விஜய் சேதுபதி, அஜித் ஆகியோர் தனக்கு பிடித்த நடிகர்கள் என்று ஜேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் நீங்கள் இணைந்து பணியாற்ற விரும்பும் தமிழ் நடிகர்கள் குறித்து இன்ஸ்டாகிராம் மூலம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேசன், தனது தந்தை விஜய் அஜித் குமார் மற்றும் விஜய் சேதுபதி என்று தெரிவித்தார்..
தான் இயக்கப்போகும் முதல் படம் குறித்து கருத்து தெரிவித்த ஜேசன், "எனது ஸ்கிரிப்டை அவர்கள் விரும்பி, எனக்கு முழு ஆக்கப்பூர்வ சுதந்திரம் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் சில தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சுபாஸ்கரன் நன்றி. இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மிகப்பெரிய பொறுப்பையும் ஒன்றாக தருகிறது. இயக்குனராக வேண்டும் என்ற எனது கனவுகளை காட்சிப்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திரு தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.
தனது மகனின் திரையுலகப் பிரவேசம் குறித்து விஜய் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மறுபுறம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம், "ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,பெருமைப்படுகிறோம். அவருக்கு வெற்றியும் மனநிறைவும் நிறைந்த வாழ்க்கையை வாழ்த்துகிறோம்! " என்று குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே ஜேசன் இயக்குனரானதற்கு பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித்தும், ஜேசனுக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குனரானதற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.