15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 13, 2020, 4:57 PM IST
Highlights

இப்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமன்னாவின் ஆசை அது கிடையாதாம். 

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். 

இதையும் படிங்க: 

அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. 

இதையும் படிங்க: 

அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். துளி கூட டிரஸ் இல்லாமல் தனது பளபளக்கும் மேனியில் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். தற்போது 30 வயதானாலும் தமன்னாவை பார்ப்பதற்கு அவரது அழகோ, இளமையோ சற்றும் குறைந்த மாதிரி தெரியவில்லை.

இதையும் படிங்க: 

இப்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமன்னாவின் ஆசை அது கிடையாதாம். தமன்னாவின் அப்பா பிரபலமான வைர வியாபாரி. அவருக்கு உதவிய சிறந்த நகை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தமன்னாவின் ஆசையாம். ஆனால் தமன்னாவிற்கு 15 வயது இருக்கும் போதிலிருந்தே பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சரி ஒரு ட்ரை செய்து பார்க்கலாம் என்று படத்தில் நடிக்க ஆரம்பித்தவருக்கு இதுவே தொழிலாக மாறிவிட்டது. சினிமாவால் தனது ஜூவல்லரி டிசைனர் கனவு சிதைந்தது தமன்னாவிற்கு வருத்தம் உள்ளதாம். 
 

click me!