குடும்பத்தை தொந்தரவு செய்யாதீங்க... கண்ணீர் விட்டு கதறிய கேப்டன் மகன் விஜய பிரபாகரன்..!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 12:18 PM IST
Highlights

தேமுதிகாவை (DMDK) சேர்ந்த விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரின், இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth) மகன், விஜய பிரபாகரன் (Vijaya prabhakaran) கண்ணீர் விட்டு அழுதது, பல தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிகாவை சேர்ந்த விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரின், இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதது, பல தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எம்ஜிஆருக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் என்றால் அந்த பெருமை விஜயகாந்த்தையே சேரும். சிம்ம குரலுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், தனது அடுக்குமொழி வசனத்தால் ரசிகர்களை கவர்ந்து அதை வாக்கு அரசியலாக மாற்றி எதிர்க்கட்சித் தலைவராக உயரும் அளவிற்கு சாதனை படைத்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சரியாக பேச முடியாத நிலைமைக்கு ஆளாகி உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் செய்திகள்: 2 வாரத்தில் தமிழ் கற்றுக்கொண்ட ரஜினி..! ஆடிப்போன கே.பாலச்சந்தர்... சூப்பர் ஸ்டார் நண்பனின் நினைவுகள்..!

 

தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு வெளிநாடுகளுக்கும் உடல் பரிசோதனைக்காக செல்லாமல் இருந்த விஜயகாந்த், சமீபத்தில் தன்னுடைய மகனுடன் திடீர் என துபாய் பறந்தார். அங்கு சிகிச்சை பெற்ற
இவர் மீண்டும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருவதாக வெளியாகி வரும் தகவல் தேமுதிக தொண்டர்கள், மற்றும் விஜயகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்: ஷாருகான் படத்தில் இருந்து நயன்தாரா விலகினாரா? உண்மை தகவலை போட்டுடைத்த படக்குழு..!

 

கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் நேரடியாக அரசியலில் கவனம் செலுத்தவில்லை என்றாலும், அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், மற்றும் மைத்துனர் ஆகியோர் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் தீயாக பிரச்சாரம் செய்த நிலையிலும், பிரேமலதா, விஜய பிரபாகரன் மற்றும் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட பலர் தோல்விகளையே சந்தித்தது தொண்டர்களை அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: புத்தர் முன்னாடி கொடுக்குற போஸா இது? 40 வயதிலும் அடங்காத கிரண் அத்து மீறிய கவர்ச்சியில் அலப்பறை செய்த போட்டோஸ்

 

எனவே தேமுதிக கட்சியை விட்டு அடுத்தடுத்து பலர் மற்ற காட்சிகளுக்கு தாவி வருகிறார்கள். அவர்களை ஆசை வார்த்தை கூறி, மூளை சலவை செய்து பிற கட்சிகள் ஈர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து சமீபத்தில் விஜயகாந்த் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மணப்பாறை, விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வீட்டு திருமணத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவரை வரவேற்க, தேமுதிக சார்பில் வழி எங்கும் தோரணம், பிளக்ஸ், பட்டாசும், மற்றும் மேல தாளத்தோடு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நொச்சிமேடு பகுதிலிருந்து திருமண மண்டபம் வரை தொண்டர்களின் இருச்சக்கர வாகன பேரணியாக விஜயபிரபாகரன் அழைத்து செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து தொண்டர்களோடு புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்குவது இவரா? ஒட்டு மொத்த போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..!

 

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், தேமுதிக கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு செல்பவர்கள் குறித்தும் பேசினார். அப்போது  இந்த கொடூர கொரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. அது போல கட்சித்தாவி சென்றவர்களால் எந்த ஒரு பின்னடைவு ஏற்படாது, கொரோனாவில் இறந்தவர்களைப் போல கட்சி தாவியுள்ளவர்களையும் நினைத்து கொள்வோம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கட்சிக்கு வந்தவர்கள் தங்களுடைய பிழைப்புக்காக மற்ற கட்சிகளுக்கு தாவியுள்ளதாக காட்டமாக பேசினார்.

மேலும் செய்திகள்: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை திடீர் என சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

 

பின்னர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப்பேசிய விஜயபிரபாகரன், திடீரென கண்ணீர் விட்டு அழுதது தேமுதிக தொண்டர்களை சோகமடைய செய்தது. அரசியலில் நேருக்கு நேராக மோதி பாருங்கள் என்றும், ஆனால் ஒரு போதும் குடும்பத்த தொந்தரவு பண்ணாதீர்கள் என கூறினார். தன்னுடைய தந்தை நலமாக உள்ளதாகவும், அவரை நன்றாக பார்த்து கொண்டு வருகிறோம். எனவே அவரை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தவறாக பேச வேண்டாம் என, மேடையிலேயே விம்பியபடி பேசிய விஜய பிரபாகரன் ஒரு கட்டத்தில் கண் கலங்கி அழ துவங்கி விட்டார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்திய பின்னரே மீண்டும் பேச துவங்கிய விஜய பிரபாகரன் இறுதியில் திருமண தம்பதியை வாழ்த்தி தன்  உரையை முடித்தார். எனினும் திடீர் என அவர் கண்ணீர்  விட்டதால் தேமுதிக தொண்டர்களும் கலங்கி விட்டனர்.

 

click me!