2 வாரத்தில் தமிழ் கற்றுக்கொண்ட ரஜினி..! ஆடிப்போன கே.பாலச்சந்தர்... சூப்பர் ஸ்டார் நண்பனின் நினைவுகள்..!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 11:08 AM IST
Highlights

சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது (dadasaheb phalke award) பெற்ற தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை அவரது உயிர் நண்பரான ராஜ் பகதூர் (Raj bahadhur) பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை அவரது உயிர் நண்பரான ராஜ் பகதூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்:ஷாருகான் படத்தில் இருந்து நயன்தாரா விலகினாரா? உண்மை தகவலை போட்டுடைத்த படக்குழு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலக ஆசையை புரிந்து கொண்டு, எந்த அளவிற்கு அவரது சகோதரர் சத்யா நாராயண ராவ்கெய்க்வாட் உறுதுணையாக இருந்தாரோ அதே அளவிற்கு ரஜினிக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் அவரது நண்பரான ராஜ் பகதூர். ரஜினிகாந்த் பேருந்தில் நடத்துனராக இருந்த போது, அவரது ஆசையை புரிந்து கொண்டு, அவர் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில அப்போது பணம் கொடுத்து உதவியவரும் இவரே. என்றுமே தன்னுடைய நண்பரின் உதவியை மறக்காத ரஜினிகாந்த் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இவரை பற்றியும், அவரது சகோதரரை பற்றியும் நினைவு கொள்வதை மறந்தது இல்லை.

கோலிவுட் திரையுலகில் தன்னிகரற்ற நடிகர் என்கிற இடத்தை பிடித்துவிட்ட ரஜினிகாந்த், சுமார் 45 வருடங்களாக நடித்து வரும் நிலையில், இவருக்கு இந்திய திரையுலகின் மிகவும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதால், அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் தகவல் பரவியது. மேலும், 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: புத்தர் முன்னாடி கொடுக்குற போஸா இது? 40 வயதிலும் அடங்காத கிரண் அத்து மீறிய கவர்ச்சியில் அலப்பறை செய்த போட்டோஸ்

 

இந்த விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பிரச்சனை காரணமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில்... அக்டோபர் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் தேசிய விருதுகள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கௌரவித்தார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்குவது இவரா? ஒட்டு மொத்த போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..!

இதற்க்கு நன்றி தெரிவிக்கும் போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில்...  "மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கி விருதினை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் திரு.கே  பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் திரு.சத்யா நாராயண ராவ்கெய்க்வாட் அவர்களுக்கும் , என்னுடைய நண்பர் திரு.ராஜ் பகதூர் அவர்களுக்கும் என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் , திரை அரங்க உரிமையாளர்கள் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் நன்றி என நினைவு கூர்ந்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கியது குறித்து ராஜ் பகதூர் கொடுத்துள்ள பேட்டியில், தன்னுடைய நண்பர் குறித்தும், அவருடன் நடத்துனராக பணியாற்றிய அனுபவங்கள், திரையுலகில் அவர் காலடி எடுத்து வைக்கும் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட போது, தமிழ் பேச வேண்டும் என கூறியதால், இரண்டே வாரத்தில் தமிழை பேச ரஜினி கற்று கொண்டு அவரை அசர வைத்ததாக பலருக்கும் தெரியாத தகவலை வெளியிட்டுள்ளார்.

click me!