இயக்குநர் சங்கத்தேர்தலில் பாரதிராஜாவுக்கு எதிராக கொம்பு சீவப்படும் அப்பாவி இயக்குநர்...

Published : Jul 04, 2019, 11:15 AM IST
இயக்குநர் சங்கத்தேர்தலில் பாரதிராஜாவுக்கு எதிராக கொம்பு சீவப்படும் அப்பாவி இயக்குநர்...

சுருக்கம்

வழக்கமாக பெரிய பரபரப்புகள் எதுவுமின்றி  அமைதியாக நடக்கும் இயக்குநர் சங்கத் தேர்தல் இம்முறை பாரதிராஜாவின் ஆவேசமான ராஜினாமாவுக்குப் பின்னர் படு பயங்கரமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  

வழக்கமாக பெரிய பரபரப்புகள் எதுவுமின்றி  அமைதியாக நடக்கும் இயக்குநர் சங்கத் தேர்தல் இம்முறை பாரதிராஜாவின் ஆவேசமான ராஜினாமாவுக்குப் பின்னர் படு பயங்கரமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜா, சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்து நடந்த சில அரசியல் நகர்வுகளால் பாரதிராஜாவின் தேர்வு விமர்சிக்கப்படவே அவர் பெருங்கோபத்தோடு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21ஆம் தஅறிஅடுத்த இயங்கத் தலைவராக யார் போட்டியிடுவார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா பதவி விலகும் போது,‘தேர்தலில் போடபட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார். பாரதிராஜாவின் இக்கருத்து போட்டியிட்டு வெல்வேன் என்ற தொனியிலும் உள்ளதாகவும் மீண்டும் அவரே போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்னொரு பக்கம் பாரதிராஜாவை எதிர்த்துப் போட்டியிட பிரபல இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனை அவரது எதிர் கோஷ்டியினர் தயார்ப்படுத்தி வருவதாகவும் தயக்கம் காட்டும் அவரை, சிலர் கொம்பு சீவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல். சுபாவத்தில் படு அப்பாவியான ஜனநாதன் பாரதிராஜாவை எதிர்த்துப்போட்டியிடுவாரா என்பது இன்னும் ஓரிரு நாளி தெரிந்துவிடும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி