இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்! என்ன காரணம்?

Published : Feb 20, 2025, 06:26 PM ISTUpdated : Feb 20, 2025, 06:41 PM IST
இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்! என்ன காரணம்?

சுருக்கம்

Director Shankar: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 'எந்திரன்' படத்தின் கதை குறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட படங்களை எடுத்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் ஷங்கர். ரஜினி, கமல், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சிக்கினார்.

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ. 4.6 லட்சம் கிடைக்கும்; டிரம்ப், மஸ்க் சிக்கன நடவடிக்கை

இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஷங்கர் தனது வழக்கறிஞருடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் 3 மணிநேரம் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எந்திரன் பட கதை விவகாரத்தில் ரூ.10.11 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என்றும் காப்புரிமை சட்டத்தை மீறி ஆதாயம் அடைந்துள்ளார் என்றும் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் தடைச் சட்டத்தின் கீழ் ஷங்கருக்குச் சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மாதம் 250 ரூபாய் சேமிப்பு ரூ.17 லட்சமாக மாறும்! பெரிய லாபம் தரும் சிறிய SIP முதலீடு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்
ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?