’இந்தியன் 2’ மீண்டும் ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்...

Published : Aug 15, 2019, 09:52 AM IST
’இந்தியன் 2’ மீண்டும் ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்...

சுருக்கம்

பெரும் இழுபறி பஞ்சாயத்துக்களுக்குப் பின் துவக்கப்பட்டுள்ள ‘ந்தியன் 2’படத்தின் புதிய ஷெட்யூல் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு தந்து சுதந்திர வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்குக் கீழே பதில் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.  

பெரும் இழுபறி பஞ்சாயத்துக்களுக்குப் பின் துவக்கப்பட்டுள்ள ‘ந்தியன் 2’படத்தின் புதிய ஷெட்யூல் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு தந்து சுதந்திர வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்குக் கீழே பதில் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

கடந்த டிசம்பரில் சுமார் ஒரு வாரப் படப்பிடிப்போடு நின்று போன ‘இந்தியன் 2’படப்பிடிப்பு ஒரு வழியாக கடந்த வாரம் துவங்கியது. கமலின் ஓல்ட் கெட் அப் திருதி அளிக்காததால் தான் பிரச்சினைகள் துவங்கின என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது புதிய ஓல்ட் கெட் அப் போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் இதுதான் அவரது புதிய கெட் அப் என்று சில கெட் அப்கள் நடமாடி வருகின்றன. அவை எவற்றையும் படப்பிடிப்புக் குழுவினர் உறுதி செய்யாத நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் கமல் கம்பீரமாக நிற்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது கமலின் ‘பிக் பாஸ்’அரங்கத்துக்கு அருகே நடந்து வரும் படப்பிடிப்பு நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஷிஃப்ட் ஆகவிருப்பதாகவும் அது சுமார் 6 மாதங்கள் வரை  நீடித்து 2020 மத்தியில் படம் ரிலீஸாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!