கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுப்பேன் ! உருகிய நடிகர் ரஜினிகாந்த் !!

Published : Aug 14, 2019, 11:45 PM IST
கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுப்பேன் ! உருகிய நடிகர் ரஜினிகாந்த் !!

சுருக்கம்

தன்னை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய கதாசிரியர் கலைஞானம் தற்போது வாடகை விட்டில் குடியிருப்பதாக அறிந்து வருத்தம் அடைவதாகவும், அவருக்கு வீடு வாங்கிக் கொடுப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் தற்போது ‘கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்ற தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவருக்கு நானே வீடு வாங்கித் தருகிறேன். தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.. 

கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ இருக்க முடியாது. கதையில் சிக்கல் ஏற்பட்டால் உடனே கலைஞானத்தை தான் அழைப்பார்கள். இயக்குநர் தயாரிப்பாளருக்கு அடுத்து கதாசிரியரின் பெயரை முன்னிலைப்படுத்தி போட வேண்டும் என ரஜினி கேட்டுக் கொண்டார்.. 

இயக்குநர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது தலைவர் என்று அழைப்பார். பாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துகள், எண்ணங்கள் மாறுபடலாம், ஆனால் நட்பு மாறாது என தெரிவித்தார்.

ஹீரோவாக இருக்க வேண்டும் என  நான் ஆசைப்பட்டதில்லை, பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். 

பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பைரவி படத்திற்குபின் நானும், கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கதாசிரியர் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து ஆசிர்வாதம் பெற்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

OTT Releases : மண்டாடி முதல் அனிமல்ஸ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அரைடஜன் படங்களின் லிஸ்ட் இதோ
TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு