போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் மையமாகுமா ? நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதில் !!

By Selvanayagam PFirst Published Aug 14, 2019, 7:41 PM IST
Highlights

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் , போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் மையமாகுமா என்பது குறித்து கேள்விக்கும் பதில் அளித்தார்.

அண்மையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தகம் சென்னையில் வெளியுடப்பட்டது. அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டினார். பிரதமர் மோடி - அமித்ஷாவை கிருஷ்ணா - அர்ஜுனன் என  ஒப்பிட்டு பேசினார். இது அரசியல்வாதிகளிடையே விவாதப்பொருள் ஆனது.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகத் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது எனவும் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் பாதுகாப்பு விஷயம் என்பதால் மதனை அரசியல் ஆக்கக் கூடாது என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டாதது கட்டாயம் ஏமாற்றம் அளிக்கிறது என்றும்  இதுதொடர்பாக தேர்வுக்குழுதான் பதிலளிக்க வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி - அமித்ஷாவை கிருஷ்ணா - அர்ஜுனன் என குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில்,  மிகவும் முக்கியமான பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தை மிகவும் ராஜதந்திரத்துடன் மோடியும், அமித்ஷாவும் கையாண்டுள்ளனர். எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய்வீடாகியுள்ளது. 

அங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதனால்தான் அவர்கள் இருவரையும் பாராட்டியதாக தெரிவித்தார். 

மத்திய அரசுக்கு பெரும்பான்மையில்லாத மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து, பின்னர் மக்களவையில் தாக்கல் செய்தனர். அவர்களுடைய ராஜதந்திரம் வெற்றியடைந்துள்ளது  என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

காஷ்மீர் விவகாரம் முக்கியமாக தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, இவ்விவகாரத்தில் எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியல் ஆகக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

அரசியல் கட்சி அறிவிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பதில் அளித்த ரஜினிகாந்த், போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் மைய தளமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார். 

click me!